சண். தவராஜா. மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
xiv, 162 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5849-45-1.
1995 முதல் ஊடகவியலாளராக அறியப்பெற்ற சண்.தவராஜா இலங்கையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார். இந்நூலில் கொரோனா பெருந்தொற்று பற்றிய விழிப்புணர்வூட்டும் தனது 29 கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். கொரோனா கிருமியின் பரவல், அது ஏற்படுத்திய பாதிப்புகள், அதன் விளைவாக உருவாகிய அரசியல் நகர்வுகள், அதனை அரசுகளும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கையாண்ட விதம் என்பவை உள்ளிட்ட பல விடயங்களை இவரது கட்டுரைகள் தருகின்றன. கொல்லும் கொரோனா, கொரோனா தடுப்பும் எதிர்காலமும், முடிவுக்கு வருமா கொரோனா அபாயம்?, கொரோனா-வில்லங்கமான எதிரி, கொரோனா-காத்திருக்கிறதா இரண்டாவது அலை?, உயிரியல் கொரோனா எதிர் அரசியல் கொரோனா, கொரோனா-மேற்குலகில் முதியோர்கள் மரணிக்க விடப்படுகின்றனரா?, கொரோனா-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐக்கியத்தைக் கேள்விக்கு உட்படுத்துகின்றதா?, கொரோனாவுடன் வாழுதல், முதல் அலைத் தாக்குதலிலேயே திணறும் லத்தீன் அமெரிக்கா, கொரோனா முன்வைக்கும் கேள்வி- மக்களா? பொருளாதாரமா?, கொரோனாவுக்குப் பிந்திய உலகு, உலக மாந்தரைக் கொன்றொழிக்கத் தயாராகும் கொரோனா, கொரோனாக் கொள்ளைநோயும் புலம்பெயர் தமிழரும், அழிவை நோக்கிச் செல்கிறதா ஐரோப்பா?, கொரோனா தடுப்பு மருந்தும் பின்னணி அரசியலும், முடிவுக்கு வருகிறதா கொரோனா கொள்ளைநோய்?, சர்வதேச அரங்கில் தடுப்பூசி அரசியல், எரிகிற வீட்டில்..!, மேற்குலகின் போலி மனிதாபிமானம், தடுப்பூசி – தேர்வா? அவசியமா?, தேவை சிந்தனையில் மாற்றம்?, அச்சுறுத்தும் கொரோனா, வழிகாட்டுமா வழிபாட்டுத் தலங்கள்?, சுதந்திரமான தடுப்பூசி மறுப்பு, மீண்டும் முடங்கும் ஐரோப்பா, ஐரோப்பாவில் படிப்படியாகக் கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி, எட்டாக்கனியாகும் பொருண்மிய மீட்சி, கொரோனாவின் போர் நிறுத்தம் ஆகிய 29 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இது மகுடம் வெளியீட்டகத்தின் 78ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72546).