பாஞ். இராமலிங்கம், மாவை சோ.தங்கராசா, அ.பகீரதன் (மலர்க் குழு). புதுச்சேரி 605 008: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், 856, காங்கேசன்துறை வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழை, 1வது பதிப்பு, ஜுன் 2024. (புதுச்சேரி 605 001: பிளாட்டினம் கிராப்பிக்ஸ்).
xvi, 296 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 978-93-91728-61-8.
இலங்கையில் 2024, ஜுன் 12-16 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்திலும், 13-14 திகதிகளில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்ற 17ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகளின் தொகுப்பு. இம்மலரில் தமிழர் தம் தாய்மொழி உணர்வு – அன்றும் இன்றும் (அரங்க மு.முருகையன்), தமிழரின் நோய் தீர்க்கும் யோகக் கலை (நீலமேகம்), சினிமாவும் தற்காலத் தொழில்நுட்பமும் (த.யூசுப் ஷெரீப்), தமிழ் மணம் கமழும் ஈழத்தின் உணவுப் பாரம்பரியம் (சா.சரவணன்), தமிழர் பண்பாடும் நாகரிகமும் (மு.அழகுராஜ்), தமிழர்களின் வேளாண் தொழில்நுட்ப மரபறிவு: சீவக சிந்தாமணி வழி (லட்சுமி தத்தை), பண்பாட்டுப் பரிமாற்றமும் இணையவழிப் பயன்பாடும் (எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி), பண்டைய தமிழ் இலக்கிய நூல்களின் சிறப்புகள் (ந.நல்லுசாமி, ந.செந்தில்குமார், ந.அருண்குமார்), கடுநோன்பும் இல்லறத்தார் கடமையும்: தேசம் கடந்து ஒளிரும் தமிழர் பண்பாடு (ரா.சரவணன்), தமிழ்ப் பண்பாட்டு அறிவியல் கல்வி நோக்கில் பாரதியாரின் ஆத்திசூடி (க.திலகவதி), சங்க இலக்கியத்தில் மகளிரின் வாழ்வியல் விழுமியங்கள் (சி.அமுதா), சிலப்பதிகாரத்தில் தொல்காப்பிய நெறிக் கூத்துக்கள் (இராச.கலைவாணி), புராதன இந்து அரசியலில் தண்டத்தின் பயில்நிலை (திருச்செல்வம் கிஷாந்தினி), திருக்குறள் கூறும் தலைமைத்துவப் பண்புகள்: கொலின்ஸின் சிந்தனைகளினூடான ஒரு தேடல் (சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்), திருவாரூர் பள்ளு உணர்த்தும் வேளாண் வாழ்வியல் (சு.தமிழ் வேலு), நவீன கவிதைகளில் வெளிப்படும் பண்பாட்டு மாற்றங்கள் (பா.இரவிக்குமார்) ஆகிய 16 ஆய்வுக் கட்டுரைகளும், நெய்தல்நாடன், முருகு மணி, அ.மாலதி மகாராணி, இராச.கலைவாணி, த.க.மணியரசன், சு.தமிழ்வேலு, முகவை முத்து ஆகியோரின் கவிதைகளும், பிரமுகர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றுள்ளன.