17180 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 3: எண் 2.

வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்), சு.சிவரெத்தினம், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 24×17.5 சமீ., ISSN: 2386-1630.

தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது மூன்றாவது தொகுதியின் இரண்டாவது இதழில், உடல் வரையும் சடங்குகளும் சடங்கு வரையும் உடல்களும்: நாட்டுப்புறவியல் பார்வைகள் (ச.பிலவேந்திரன்), நாடகமும் அரங்கியலும் கற்கை நெறி: மீள் எண்ணக்கருவாக்கத்தின் அவசியம் (க.சிதம்பரநாதன்), பாட விமரிசனவியல் நோக்கில் பதிப்பாசிரியர் சி.கணேசையர் (ஸ்ரீ பிரசாந்தன்), பிளேட்டோவும் பின் நவீனத்துவ அழகியல் சிந்தனைகளும்-ஒரு மெய்யியல் நோக்கு (இரத்தினசபாபதி பிரேம்குமார்), சிலப்பதிகார புத்தாக்க வடிவங்களும் அவற்றின் புனைவுகளும் (சி.சந்திரசேகரம்), கிழக்கு மாகாண முஸ்லிம்களின் முன்னைய அரங்கியல் மரபுகள் (எம்.எஸ்.எம்.அனஸ்) ஆகிய ஆறு ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61640).

ஏனைய பதிவுகள்

14269 சமஷ்டி முறையும் சுயநிர்ணய உரிமையும்.

மாற்றுக் கல்வி நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கல்வி நிலையம், சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெரஸ், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2006, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (ஹோமகம: கருணாரத்ன அன்ட்