சு.சிவரெத்தினம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 95 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 25×17.5 சமீ., ISSN: 2386-1630.
தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது நான்காவது தொகுதியின் முதலாவது இதழில், அறிவின் உலகமயமாக்கலும் அறிவுச் சமூகங்கள் பண்பாட்டில் வேர்கொள்ளல் எனும் தேவையும் ந.முத்து மோகன் (ஆங்கில மூலம்), இந்திரா மோகன் (தமிழாக்கம்), ஈழத் தமிழ் நவீன அரங்கு-பனுவலும் ஆற்றுகையும் 1950-70கள் வரையான நவீன அரங்கப் போக்குகள் பற்றிய ஒரு மீள்புரிதல் (க.சிதம்பரநாதன்), ஆன்மாவுக்கு உணவாகும் சூபி இசை-சூபி இசை மரபும் அதன் அழகியல் பரிமாணமும் (எம்.எஸ்.எம்.அனஸ்), கலை-பண்பாடு-கலப்புத் தன்மை (ர்லடிசனைவைல): ஒரு பிராரம்ப உசாவல் (வடிவேல் இன்பமோகன்), வ.வே.சு.ஐயரின் கம்பராமாயணத் திறனாய்வுகள் ஒரு நோக்கு (ஸ்ரீ பிரசாந்தன்), தமிழிற் செயற்பாட்டுவினைப் பாவனை: ஓர் அவதானக் குறிப்பு (சி.சிவசேகரம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளை கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71219).