சி.சந்திரசேகரம் (பிரதம ஆசிரியர்), க.இராஜேந்திரம், ந.முத்து மோகன், எம்.எஸ்.எம்.அனஸ், வ.மகேஸ்வரன் (ஆசிரியர் குழு). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 102 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 25×17.5 சமீ., ISSN: 2386-1630.
தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது ஐந்தாவது தொகுதியின் இரண்டாவது இதழில், பண்டைத் தமிழ்ச் சமூக வரலாறு: ‘எழுதியல்’ ஐராவதம் மகாதேவன் அவர்களின் வகிபாகம் (வீ.அரசு), சங்க காலமும் சமகாலமும்: சில பனுவல்கள் சில பார்வைகள் (சுந்தர் காளி), ஈழத்து அரங்கில் பண்பாட்டு ஊடாட்டம் 1970 தொடக்கம் இன்றைய சமகால அரங்கப் போக்குகள் வரை உள்ளடக்கிய ஓர் ஆய்வு (க.சிதம்பரநாதன்), குறிப்பு வினை பற்றிய ஒரு விசாரணை (சி.சிவசேகரம்), காலனித்துவ, பின்காலனித்துவ கருத்தியலுக்குள் பழங்குடியினரின் கலைகள் (வடிவேல் இன்பமோகன்), அகநானூற்றுக்கு எழுந்த ஈழத்து, தமிழகத்து, உரைகள்: கணேசையரின் அகநானூற்றுரையையும், ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் அகநானூற்றுரையையும் முன்னிறுத்திய ஓர் உசாவல் (பெருமாள் சரவணகுமார்) ஆகிய ஆறு ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65994).