வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2022. (சென்னை 000116: ஆதவன் ஆர்ட் பிரன்ட்).
ix, 116 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 24×18 சமீ., ISSN: 2386-1630.
தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது ஒன்பதாவது தொகுதியின் இரண்டாவது இதழில், சிலப்பதிகாரத்தில் திணைசார் நாட்டார் மரபுகளும் வெளிப்படும் அழகியலும் (ஆ.தனஞ்செயன்), பத்தொன்பதாம் நூற்றாண்டு இலங்கையில் சுதேச சமயங்களின் நிலை: ஆறுமுகநாவலர், குணானந்த தேரரை அடிப்படையாகக் கொண்ட வாசிப்பு (தி.செல்வமனோகரன்), திருக்குறளில் கடவுள் என்ற கருத்து ஒரு பின்னமைப்பியல் வாத நோக்கு (இரத்தினசபாபதி பிரேம்குமார்), தமிழர் பண்பாட்டில் முலையும் முலையறுத்தலும் (ஜெ.ஹறோசனா), வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் தொல்காப்பியம் காட்டும் முப்பொருட்கள் (த.திருப்பதி, ப.வேல்முருகன்), தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் பெண்களின் மனநிலை: விவாகரத்து செய்யப்பட்ட, தனிமையில் வாழும், விதவைப் பெண்களை அடிப்படையாகக் கொண்டது (ஏ.எல்.எம்.றியால்) ஆகிய ஆறு ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.