வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 29/1 A, ஞானசூரியம் சதுக்கம், 2ஆம் குறுக்குத்தெரு, 1வது பதிப்பு, ஆனி 2023. (சென்னை 000116: ஆதவன் ஆர்ட் பிரன்ட், போரூர்).
iii, 124 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 24×18 சமீ., ISSN: 2386-1630.
தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது பத்தாவது தொகுதியின் முதலாவது இதழில், மக்களைப் பதற்றத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாக்கும் கலைப் போலிகள், இனமையவியம், காலனியம், மானிடவியல்: தொடரும் உறவுகள் (இ.முத்தையா), திருமுருகாற்றுப்படைக் கவிப்பெருமாள் உரை மரபு (இரா.அறவேந்தன்), பகவத் கீதையில் வெளிப்படுத்தப்படும் தனிநபர் ஆற்றுப்படுத்தல் பண்புகளும், ஆற்றுப்படுத்தல் நுட்பங்களும் ஒரு மெய்யியல் நோக்கு (மாரிமுத்து பிரகாஷன்), சமய வழிபாட்டு முறைகளில் சாதி அடையாளத்துவமும் கலைகளும்: கிழக்கிலங்கை பறை மேளக்கலை பற்றிய மானுடவியல் நோக்கு (குணநாயகம் விக்னேஸ்வரன்), நாவலர் நல்கிய ஆய்வுமுறை: பெரியபுராண சூசனம் (செல்லத்துரை சுதர்சன்), இடைக்கால இலங்கையில் இந்து வெண்கலப் படிமங்கள் (எம்.எம்.ஜெயசீலன்) ஆகிய ஆறு ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71985).