ம.மேர்சி சுஜந்தினி (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xvi, 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
இவ்விதழின் மலர்க் குழுவில் இரா.செல்வவடிவேல், கு.இராயப்பு, கி.மா.நெல்சன், மீரா லெவ்வை லாபீர், செல்வி ச.விஜயலட்சுமி, நீ.ம.பாலச்சந்திரன், திருமதி ந.சேர்ச்சிலம்மா, செல்வி ப.தர்மினி, செ.வசன்பேக், சா.வி.ஜோன் கலிஸ்ரஸ் ஆகியோர் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். இவ்விதழில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், மனித விழுமியங்களை வாழவைப்போம், நாளை நமதாகும் நல்லதையே செய்வோம், செயலிழக்கும் பாரம்பரிய கிடுகுத் தொழிலும் பெண்களின் வாழ்வாதார பாதிப்பும், ஆதரவு, உளவளத்துணை சேவை தொடர்பான ஒரு நோக்கு, பெண்ணியம் போற்றுவோம், யாழ்ப்பாணத் தமிழர் எதிர் சமூக விழுமியங்கள், கலை (மன)வலிமை, குழந்தைகளின் உணவும் ஆரோக்கிய வாழ்வும், இன்றைய சமுதாயத்தின் நிலை, சிறுவர்களின் உடல்நலம், அறிவு மற்றும் ஆற்றல் விருத்திக்கான விசேட நிகழ்ச்சித் திட்டங்கள், இன்பமொழி, நானிலம் போற்றிடும் நல்ல வாழ்விற்கு, தாய்நாடு, விழுதுகள், குத்தாட்டமாக உருமாறிவரும் கூத்துக் கலைகள், தமிழர் இசைக்கருவிகளும் தற்காலப் பயன்பாடும், அன்பால் அணைப்போம், உளவியல் தாக்கங்களைக் குணப்படுத்தல், நாவலும் நாணலும், கூட்டுக்குடும்பம் குதூகலமானது, பெண்ணியம் காத்திடு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பல்வேறு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.