எம்.டி.இராகவன் (ஆங்கில மூலம்), சா.திருவேணிசங்கமம் (தமிழாக்கம்). கொழும்பு 4: இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xx, 348 பக்கம், விலை: ரூபா 1800., அளவு: 21.5×14.5 சமீ.
இது மலையாள இனத்தவரான எம்.டி.இராகவன் எழுதிய வுயஅடை ஊரடவரசந ைெ ஊநலடழெ என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்தியரான எம்.டி.இராகவன் காலனீய கால இறுதிப் பகுதி (1946) தொடக்கம் சுதந்திரத்தின் பின்னரும் சிலகாலம் வரையில் இலங்கை நூதனசாலைத் திணைக்களத்தின் தலைவராகப் பணியாற்றியவர். யாழ்ப்பாண நூதன சாலையை புனருத்தாரணம் செய்வதில் பெரும்பங்கு வகித்தவர். இலங்கைத் தமிழரின் பண்பாடு தொடர்பான ஆய்வினைச் செய்வதற்கு தேவையான அடிப்படைத் தகவல்களைப் பெறுவதற்கு அவரது தொழிலும் அத்தொழில் நிமித்தம் அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் அறிஞர் தொடர்புகளும் வாய்ப்பாய் அமைந்தன. இந்நூல் அறிமுகம்-கள ஆய்வு: இனமும் பண்பாடும், இலங்கைத் தமிழர்களின் பூர்வீகம், தமிழர்களும் விஜயன் காலமும், விஜயன் காலத்திலிருந்து கண்டிக் காலம் வரை, கண்டியரசர்களின் தமிழ் வம்சாவளி, பாண்டிய சோழ அரசுகளுடன் இலங்கையின் தொடர்பு, இலங்கையும் விஜயநகரப் பேரரசும், யாழ்ப்பாண தீபகற்பம்: புவியியலும் இடவியலும், தீவுகளும் களப்புகளும், யாழ்ப்பாணத்தின் தொடர்புகள்: உள்நாடும் வெளிநாடும், ஆரியச் சக்கரவர்த்திகள்- முதல் கட்டம், நாடோடி இசைப்பாடல்கள்- யாழ்ப்பாணன் தொன்மம், ஆரியச் சக்கரவர்த்திகள்-பிந்திய கட்டம், யாழ்ப்பாணத்தின் தலைநகரங்கள், யாழ்ப்பாணமும் போர்த்துக்கீசரும், யாழ்ப்பாணமும் டச்சுக்காரர்களும், யாழ்ப்பாணமும் ஆங்கிலேயரும், தமிழர் தீவெங்கிலும் பரந்திருக்கும் பாங்கு, யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பு, வெள்ளாளர்கள், குருகுலத்தார், பிராமணர், வன்னியர், முக்குவர், சாண்டார், அடிமை-குடிமைக் குழுக்கள், குடிமக்கள், சமூக வழமைகள், தேசவழமைச் சட்டம், நல்வாழ்வுப் பிரச்சினைகள், முஸ்லிம், சமயத்துறை, யாழ்ப்பாண விவசாயிகளும் அவர்களின் பயிர்ச்செய்கை முறைகளும், கைத்தொழிலும் கைப்பணியும், கவின் கலைகள்: நடனமும் நாடகமும், நாட்டார் நாடகங்களும் நாட்டார் நடனங்களும், யாழ்ப்பாணம்- மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள், திராவிடப் பிரச்சினை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.