துஷால் விதானகே, உபேந்திர பெரேரா. கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
388 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையின் உள்ளடக்கங்கள் பற்றி இலகுவாக அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு அறிக்கையின் சுருக்கத்தையும் அதில் உள்ளடங்கியுள்ள பிரதான சிபரிசுகளையும் இப்பிரசுரம் வழங்குகின்றது. ஆங்கிலத்தில் வெளிவந்த இவ்வறிக்கையை முழுமையாக வாசித்து, அதிலுள்ள அத்தியாவசிய பகுதிகளை வடித்தெடுத்து சுருக்கமாக வடிவமைத்தவர் ரெபெக்கா பிரௌன் அவர்களாவார். அறிக்கையின் சுருக்கத்தை கைந்நூலாகத் தயாரித்து அவற்றின் பிரதிகளை இலவசமாக வாசகர்களுக்கு வழங்க நிதிவசதியை வழங்கியவர்கள் ரோயல் நோர்வேஜியன் தூதரகத்தினரும் டைகோனியா நிறுவனமும் ஆவர்.