ஜகத் லியன ஆரச்சி. கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 29 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
அண்மைக்காலங்களில் அரசாங்க தரப்பினரால் வெளியிடப்பட்ட ஆவணங்களில்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை (LLRC) முக்கியமானதொன்றாகும். 388 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையின் உள்ளடக்கத்தை விளக்கமான முறையில் தெளிவூட்டும் சாராம்சத்தை சிறு ஏடாக வெளியிடும் பணியை தேசிய சமாதானப் பேரவை பொறுப்பேற்றிருந்தது. மொத்தமாக ஆறு தொடர் புத்தகங்களைக் கொண்டதாக ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட இவ்விளக்க நூலின் தமிழாக்கம் இதுவாகும்.