எம்.எம்.ஜெயசீலன், ஜெ.ஹரோசனா (தொகுப்பாசிரியர்கள்). கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், இணை வெளியீடு, சுவிட்சர்லாந்து: ஊடறு, 1வது பதிப்பு, 2022. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
135 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89867-05-9.
இலங்கையில் தொழிற்சங்க அரசியல் மற்றும் பெண்விடுதலையின் முன்னோடிச் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான கோ.ந.மீனாட்சியம்மாள், 20ஆம் நூற்றாண்டின் மூன்றாம், நான்காம் தசாப்தங்களில் தமிழ்ச் சூழலில் இயங்கிய வெகுசில முற்போக்குப் பெண்மணிகளுள் தனித்துவம் மிக்க ஆளுமையாவார். பாடலாசிரியர், பாடகர், மேடைப் பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர், களச் செயற்பாட்டாளர் எனப் பல தளங்களில் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டுள்ள அவரை நினைவுகூர்ந்து அவரின் எழுத்துக்களைத் தொகுத்து வெளியிடும் முன்னோடி முயற்சி இதுவாகும். ‘பாடல்கள்’ என்ற பகுதியில், இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு-முதற்பாகம், இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு-இரண்டாம் பாகம், இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம், இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை ஆகிய நான்கு பாடல்களும், ‘கட்டுரைகள்’ என்ற பகுதியில், வரவுக்கு மிஞ்சிய செலவு, உள்ளதைக்கொண்டு திருப்தி, ஸ்திரீகளுக்கு சுதந்திரம், இந்தியாவின் முன்னேற்றம், சமையல் பாகம் பெண்களுக்கு உரியது, ஸ்ரீகளுக்குச் சமசுதந்திரம் ஆகிய ஆறு கட்டுரைகளும், ‘பின்னுரை’ என்ற பகுதியில் ஸ்ரீமதி கோ.ந.மீனாட்சியம்மாள்: பாடல்களும் கட்டுரைகளும்’ என்ற ஆக்கமும் இடம்பெற்றுள்ளன.