ஊடறு ரஞ்சி, புதிய மாதவி (தொகுப்பாசிரியர்கள்). சென்னை 600 024: காவ்யா, 16, இரண்டாம்; குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, 2019. (சென்னை 600 077: மணி ஆப்செட்).
viii, 365 பக்கம், விலை: இந்திய ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-93-86576-98-9.
03-11-2019 அன்று தேசிய நூலக வாரிய ‘த போட்’ அரங்கில் ‘பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ‘ஊடறு அனைத்துலக பெண்கள் மாநாடு’ நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல் ‘சங்கமி-பெண்ணிய உரையாடல்கள்’. 33 பெண்களின் நேர்காணல்கள் தொகுப்பான இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் ‘ஊடறு’ றஞ்சி (சுவிஸ்), புதியமாதவி (தமிழ்நாடு) ஆகியோராவர். பெரும்பாலும் தமிழ்ப்பெண்கள் இடம்பிடித்துள்ள இத்தொகுப்பில் மற்ற மொழிகளைச் சேர்ந்த பெண்களும் உண்டு. அவ்வகையில், வ.கீதா, அ.மங்கை, அம்பை, ஒளவை, ஊடறு றஞ்சி, சிவகாமி, ஆழியாள், புதியமாதவி, ரஜனி, ஜானு, பாமா, ஜீவசுந்தரி, கல்பனா, சிவரஞ்சனி மாணிக்கம், பத்மினி பிரகாஷ், கமலா வாசுகி, குந்தவை, மலர்வதி, வெற்றிச் செல்வி, தாமரைச்செல்வி, சௌந்தரி, லறீனா, சர்மலா, மேரி கோம், சர்மிளா ரெகே, தேனுகா, சந்தியா எக்னெலிகொட, வங்காரி மாத்தா, சுனிலா, நவால் எல் சதாவி, மாயா அஞ்சலோ, மலாலாய் ஜோய், ஹெர்டா முல்லர் ஆகிய 33 பெண்ணிய ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.