செல்வி திருச்சந்திரன் (ஆங்கில மூலம்), லறீனா அப்துல் ஹக் (தமிழாக்கம்). தமிழ்நாடு: படிமம் வெளியீடு, 2/203, அண்ணா நகர், காவேரிப் பட்டினம் 635 112, கிருஷ்ணகிரி மாவட்டம், 1வது பதிப்பு, 2024. (கிருஷ்ணகிரி மாவட்டம்: கனிஷ்க் அச்சகம்).
xxix, 140 பக்கம், விலை: ரூபா 1750., அளவு: 24×16.5 சமீ., ISBN: 978-93-94891-77-7.
கொழும்பில் இயங்கும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநரான கலாநிதி செல்வி திருச்சந்திரன், பெண்நிலை, வர்க்கம், பண்பாடு, பால் நிலை போன்ற பல விடயங்களை ஆய்வு செய்து எழுதி வெளியிட்டு வருபவர். ‘நிவேதினி’ என்ற பெண்நிலைவாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணயாற்றுகின்றார். இவர் ஊயளவந யனெ வைள அரடவைிடந அயெகைநளவயவழைளெ என்ற நூலினை 2023இல் எழுதி வெளியிட்டிருந்தார். அந்நூலின் தமிழாக்கமே இதுவாகும். சாதிய வரலாறு ஒரு மீளுருவாக்கம், சாதிய ஆய்வுகள் என்ற அடிப்படையில் சமூகவியல் பார்வையை வெளிப்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள், சாதியெதிர்ப்பு இயக்கங்கள் எதிர்ப்புப் போராட்ட எழுச்சி, பிராந்தியத்திற்குரிய சிறப்பான சாதிய ஒழுங்குமுறையும் அவற்றின் வேறுபாடுகளும், சாதி மறுப்பு கிறிஸ்தவ மதமாற்றமும் விடுதலைப் புலிகளின் இடையீடுகளும், பதிவுகளை மீள ஒழுங்குபடுத்தலும் வேறு சில அவதானிப்புகளும், முடிவுரை ஆகிய ஏழு இயல்களில் இவ்வாய்வு இலங்கையின் வடபுலத்தில், குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் போருக்கு முன்னரும், பின்னரும் நிலவும் சாதிய நிலைமை பற்றி விளக்குகின்றது.