க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-624-6601-31-7.
இது வடமராட்சி பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வு. அறிமுகம், உளநலம் என்றால் என்ன?, வடமராட்சிப் பிரதேச சமூக அமைப்பு, வடமராட்சி வாழ் மக்களின் வாழ்வியல், சாதிப்பெயர்- சாதித் தொழில், ஆய்வு முறையியல் (ஆய்வுப் பிரதேசமும் பங்குபற்றுநரும் மாதிரி எடுப்பு முறையும், தரவு சேகரிப்பு முறைமை, வினாக்கொத்து, நேர்காணல், ஆவணங்கள்), நீர்ப் பிரச்சினை, சாதி மாற்றுத் திருமணப் பிரச்சினைகள், தீண்டாமை காரணமான பிரச்சினை, ஆய்வுப் பெறுபேறுகளும் விதப்புரையும், வடமராட்சி சமூக அமைப்பும் பொதுவான சாதிப்பிரச்சினையும், சாதியப் பிரச்சினைகளும் உள சமூகப் பாதிப்புகளும், ஆய்வுப் பெறுபேறுகள், விதப்புரை, நிறைவுரை ஆகிய இயல்களினூடாக தமிழர் சமுதாய சாதி அமைப்பினால் ஏற்படும் உள-சமூகப் பிரச்சினைகளும் பாதிப்புகளும் பற்றிய இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உளவியல் சிறப்புக் கலைக்கான பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலத்தில் வடமராட்சிப் பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.