இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி. பிரான்ஸ்: இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, F.D.S.D.S., 70, Square des Sauves, 95140, Garges Les Gonesse, 1வது பதிப்பு, ஜுலை 2013. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட் பிரின்டர்ஸ்).
(6), 76 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 26.5×18.5 சமீ.
2007 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ‘வடு’ என்னும் பெயருடன் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்திருந்தது. தொடர்ந்து 19 இதழ்கள் வரை வெளிவந்திருந்தன. யுத்தம் முடிவடையும் வரையில் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரின் வெளியீடாக வெளிவந்த ‘வடு’, அதன் பின்பு இலங்கைச் சிறுபான்மை மகாசபையின் வெளியீடாக பிரசுரிக்கப்பட்டு வந்தது. இதுவரை ‘வடு’ பத்திரிகையின் 19 இதழ்களிலும் வெளிவந்த முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இச்சிறப்புத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடையாளங்களின் தொகுப்புரையும் சமகாலத்தின் மாற்று நிலையும், தலித் அரசியல் அறிக்கை, ‘வடு” இதழ்களின் ஆசிரியத் தலையங்கங்களின் மீள் பிரசுரம், சமகால சமூக நிலவரங்கள் குறித்த தெளிவிற்காக: தோழர் தெணியானிடமிருந்து, ஈழத்து தலித் அரசியலில் ஒரு மைல்கல்: பாரிஸ் தலித் மகாநாடு, தலித் சமூக அரசியல் வெற்றிடம், இந்து நாகரீகமா நயவஞ்சகமா?, பனை தென்னைவள அபிவிருத்தி நிறுவனங்களின் தோற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களும் (இ.இராஜேஸ்கண்ணா), இலங்கைப் பயணம் (பிரான்ஸ் இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் அவர்களது இலங்கைப் பயணம்-நேர்காணல்), இலங்கைத் தலித் சமூகங்களுக்கு எதிரான சதிகளின் நவீன வடிவம், நூல்விமர்சன அரங்கு (இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி ஆகிய நூல்களின் திறனாய்வு), இரண்டாவது தலித் மாநாடு 16-17 பெப்ரவரி 2008, எறிகணை இணையத்திற்கு வழங்கப்பட்ட இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் அவர்களின் நேர்காணலின் ஒரு பகுதி, மெல்லத் துளிர்விடும் ஜனநாயகமும் அதனுடன் சேர்ந்த சாதியமும் ஆகிய 14 தேர்ந்த ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.