இ.ம.தைரியர் (இயற்பெயர்: குருகுலசேகர தைரிய முதலியார்). யாழ்ப்பாணம்: ஜேம்ஸ் ஜோன், ஸ்வார்ட்ஸ் ஒழுங்கை, சுண்டிக்குளி, 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
14 பக்கம், விலை: 50 சதம், அளவு: 18×12.5 சமீ.
முகவுரை, மரபுங் கிளையும், பிராமணர், சத்திரியர், பௌரவர் – பரதர், வைசியர், சூத்திரர்
சிவியார், கம்மாளர், நழவர், பள்ளர், அம்பட்டன், பறையன் ஆகிய உபதலைப்புகளில் இச்சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர், சிங்கை ஜனனதூதன் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் தனது அறிமுகவுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். ‘இந்தியாவிற் பல்லாண்டுகளாய் நாம் வசித்தோம். பல வகுப்பினருடன் சகவாசஞ் செய்தோம். வருண நூற்களைக் கற்றுணர்ந்தோம். பேழைதனைப் போல் வயிறு கொண்ட பார்ப்பார் பிழைப்பதற்குச் சாதிபேதத்தைக் கட்டி வைத்தாரென நம்மறிவிற் புலப்படுகின்றது. இச் சாதிபேத விஷயமே இந்திய இலங்கைச் சுதேசிகளைத் தலைகீழாய் விழுத்திவிட்டது. எக்காலமும் பதினாறு பிராய மார்க்கண்டேயர் போலிராமல், சாதிப் பேதத்தினாற் கேடுற்றுப் படாதபாடுற்றுச் சீதேவியாகிய சுதேச நாடிழந்து, மான் வேட்டையாடச் சென்றவன் புலி முகத்தில் தென்பட்ட விதமாய்ப் பரிதாப நிலையிலாகினர். ஐயையோ! எம்பெருமானினி யென்செய்வன் ! இப்பரிதாப மொருபாலிருக்கச் சாதிக் கோட்பாட்டின் நிலை அதிக அனுதாபத்திற் கிடமாயிருக்கின்றது. தற்காலத்தில், கீழ்த்தரமாய் மதிக்கப்படா நிற்கின்றவர்கள் இந்து இதிகாச விதிப்படி அந்நிரையைச் சார்ந்தவர்களல்லர். அன்றியும், சில வருணப் பெயர்கள் நசுங்கித் தேய்ந்து ஒடுங்கி முடங்கியுமிருக்கக் காண்கிறோம். இவ்விஷயத்தை சுருங்கச் சொல்லி விளக்குவதற்கே இந்நூலை யியற்றத் தலையிட்டோம்’
மேலும் பார்க்க:
கரையார். 17958
மனுசங்களோடா நீங்கள்: 17699
ஜீவநதி: வைகாசி 2023: சாதியச் சிறப்பிதழ். 17480