பதிப்பாசிரியர் குழு. திருக்கோணமலை: கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்).
90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
1998இல் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு ஒழுங்குசெய்திருந்த தமிழ் இலக்கிய விழாவின் முக்கிய அம்சமாக ‘நிர்வாக மொழியாகத் தமிழ்-இலங்கையின் நிலையும் நிலைமைகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கொன்று இடம்பெற்றது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும், அங்கு இடம்பெற்ற காத்திரமான கருத்தாடல்களும் தொகுக்கப்பெற்று இந்நூலாக உருவாகியுள்ளது. அரசகரும மொழியாகத் தமிழ்: இலங்கை நிலையும் நிலைமைகளும் (கா.சிவத்தம்பி), பன்மொழி நிர்வாகத்தில் தமிழ் மொழிப் பயன்பாடு (க.குணராஜா), தமிழ் நிர்வாக மொழியாக: மொழி நுண்திறன் (ச.சச்சிதானந்தன்), நீதி மன்றங்களில் தமிழ் (கா.சிவபாலன்), தகவல் தொடர்பாடலில் தமிழ் (இரா.சிவச்சந்திரன்), பொதுப் பெயர்ப் பலகைகளில் தமிழ் (எஸ்.தவராசா), பொலிஸ் நிலையங்களில் தமிழ் (யு.று.யு.சத்தார்), இலங்கையில் தமிழை அரசகரும மொழியாகப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் (அ.சண்முகதாஸ்), நீதித்துறையில் தமிழ்மொழியின் உபயோகம் (வி.ரி.தமிழ்மாறன்), சட்டத்துறை ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதில் உள்ள சில பிரச்சினைகள் (எம்.ஏ.நுஃமான்), தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி-மக்கள் நிலை நின்ற நோக்கு (வீ.அரசு), தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் செயற்பாடும் உள்ளகக் கட்டுமானங்களும் (ம.இராசேந்திரம்), தமிழின் தற்காலப் பயன்பாடு (எஸ்.விநாயகலிங்கம்), இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு – அத்தியாயம் ஐஏ- மொழி ஆகிய 14 தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. இறுதியில் ‘கருத்தாடல்கள்’ என்ற பிரிவில் கருத்தரங்கின் முக்கிய உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12589).