எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க. கொழும்பு 5: அரசாங்க பாஷைப் பகுதி, அரச கரும மொழித் திணைக்களம், வெளியீட்டுப் பிரிவு, 5 பொன்சேக்கா வீதி, 1வது பதிப்பு, மே 1961. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×18 சமீ.
‘மொழித் தகராறு: அதன் பூர்வ வரலாறு’ (உத்தியோக மொழி மசோதா சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி காலிமுகத் திடலில் நடாத்திய சத்தியாக்கிரகத்தைப் பற்றியும் அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கலவரங்களைப் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டபோது, 1956ஆம் ஆண்டு ஜ{ன் மாதம் 5ஆம் திகதியன்று சனப் பிரதிநிதிகள் சபையில் ஒத்திவைப்புப் பிரேரணையின் பேரில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க நிகழ்த்திய உரை), ‘அரசகரும மொழிப்பிரச்சினை: இதன் வரலாறு’ (1956ஆம் ஆண்டு ஜ{ன் மாதம் 6ஆம் திகதியன்று சனப்பிரதிநிதிகள் சபையில் நிகழ்த்திய சொற்பொழிவு), ‘அரசகரும மொழி: அரசாங்கக் கொள்கை’ (1956ஆம் ஆண்டு ஜ{ன் மாதம் 14ஆம் திகதியன்று சனப் பிரதிநிதிகள் சபையில் நிகழ்த்திய சொற்பொழிவு), ‘சிங்களமும் தமிழும் உபயோகித்தல்” (1957ஆம் ஆண்டு ஜ{ன் மாதம் 19ஆம் திகதியன்று சனப் பிரதிநிதிகள் சபையில் நிகழ்த்திய உரை), ‘தமிழ் மொழிக்குத் தகுந்த இடம்’ (1958ஆம் ஆண்டு ஓகஸ்ட்; மாதம் 5ஆம் திகதியன்று சனப் பிரதிநிதிகள் சபையில் நிகழ்த்திய உரை), ‘1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம்”, ‘1958ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க, தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்’ ஆகிய ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61091).