தொகுப்புக் குழு. கொழும்பு 7: வெளியீட்டப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், அஞ்சல் பெட்டி 520, இல. 421, புல்லர் வீதி, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு: அரசாங்க அச்சகம், பானலுவ, பாதுக்க).
vi, 316 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
இந்நூல் இலங்கையின் 22 அரசாங்கத் திணைக்களங்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட சொற்களைக் கொண்டது. ஒவ்வோரினப் பொருட்களை உணர்த்தும் ஆங்கிலச் சொற்களைத் தொகுத்து, அச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமாக ஒவ்வொரு தமிழ்ச் சொல்லைக் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலவிடங்களில் தேவை கருதி ஓரினப் பொருளையுணர்த்தும் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றிற்குத் தமிழ்ச் சொல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. Glossary of Official Terms and Phrases in Tamil என்ற ஆங்கிலத் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இக்கலைச்சொற்றொகுதியின் தொகுப்புக் குழுவில் அ.வி.மயில்வாகனம், கா.பொ.இரத்தினம், வ.பொன்னையா, வே.பேரம்பலம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59044).