17206 அரசகருமச் சொற்றொகுதி (நான்காம் பகுதி).

தொகுப்புக் குழு. கொழும்பு 7: வெளியீட்டப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 421, புல்லர் வீதி, 1வது பதிப்பு, 1962. (கொழும்பு: அரசாங்க அச்சகம், பானலுவ, பாதுக்க).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

தமிழில் வெளியிடப்படும் அரசகருமச் சொற்றொகுதிகளில் நான்காவது பகுதியாக வெளிவரும் இத்தொகுதி ஐந்து அரசாங்க நிலையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி 1600 பதங்கள் வரை கொண்டுள்ளது. கல்விநூற் பொருட் கலைச்சொற்றொகுதிகளில் காணப்படும் அநேக தமிழ்ச் சமபதங்கள் இங்கே ஏற்ற இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. பெறுமானம் மதிப்பீடு திணைக்களம், கனிப்பொருளியல் திணைக்களம், இந்திய-பாக்கிஸ்தான் வதிவோர் பதிவுத் திணைக்களம், கொழும்பு கப்பற்றுறை ஆணைக்குழு, நிதி அமைச்சு ஆகிய திணைக்களங்களால் அனுப்பப்பட்ட சாதனங்களிலிருந்து சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59028).

ஏனைய பதிவுகள்