கோகிலா மகேந்திரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
viii, 118 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-96-3.
திருமணம், குடும்பம், பெற்றோரியம் ஆகியவை சார்ந்த உளவியல் மையக் கட்டுரைகள். எமது சமூகத்தில் மட்டுமல்ல, உலகம் எங்கணுமே இன்று குடும்பம் என்ற அமைப்பின் வலிமை மெல்ல மெல்லச் சரிந்து வருகிறது. மனிதன் ‘சுதந்திரம்’ என்ற கருத்தேற்றத்தால் உந்தப்பட்டு, தனி ஒருவராக வாழவே விரும்புகிறான். இயற்கை மனிதரைச் சமூக விலங்காகப் படைத்திருப்பதால், இந்தப் போக்கு மனிதகுல மேம்பாட்டுக்கு நன்மை பயக்காது. குடும்பம் என்ற அமைப்பு ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்குடன் ஆசிரியரால் இதிலுள்ள கட்டுரைகள் ஜீவநதியில் தொடராக எழுதப்பட்டிருந்தது. பந்தம், கூடல், ஒற்றை, முக்கோணம், உட்பகை, ஆயதி, இருவிழிப் பார்வை, சீர்மியம், வகை, கருப்பை உயிர், தொட்டில், சுயாதீனம், காப்பு, வழி மீது விழி, பதின்மம், நாளும் நலம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இத்தொடர் இங்கு நூலுருவாக்கப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 275ஆவது நூலாக வெளிவந்துள்ளது.