போரிஸ் புத்ரின் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: தகவல் துறை, சோவியத் ஸ்தானிகராலயம், 1வது பதிப்பு, ஜனவரி 1980. (கொழும்பு 10: பிரகதி அச்சகம், 93, மாளிகாவத்தை வீதி).
176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
இது இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் சோவியத் ஸ்தானிகராலயத்தின் தகவல் துறையினரால் வெளியிடப்பட்ட சுருக்கமானதொரு அரசியல் சொற்களஞ்சியம். இந்தச் சொல்லகராதியானது சமகாலத்தில் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் சஞ்சிகைகளிலும் அரசியல், சமூக, பொருளாதார நூல்களிலும் பயன்படுத்தப்படுகின்ற சுமார் 300 அரசியற்துறை சார்ந்த பதங்களையும் கருத்துத் தொடர்களையும் மார்க்ஸிய லெனினிய நிலைப்பாட்டிலிருந்து விளக்குகின்றது. பல பொருட்களைக் கொண்ட சொற்களைப் பொறுத்தவரையில் அவற்றின் அரசியற் பொருள் மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல்லகராதியின் வேறிடங்களில்; காணப்படும் வரைவிலக்கணங்களுக்குரிய பதங்களும் கருத்துத் தொடர்களும் தடித்த எழுத்துகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 73384).