பி.முத்துலிங்கம். யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, 62, காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xii, 108 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-44455-2-9.
பி.முத்துலிங்கம் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆசிரியராகவும், அதிபராகவும், கல்வி நிர்வாக சேவையில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1976ஆம் ஆண்டு தனது இருபத்தி மூன்று வயதிலிருந்து சுய தேடல் மூலம் பொதுவுடைமைச் சித்தாந்தம் தொடர்பாகக் கற்றறிந்து, தனது அரசியல், சமூக, ஆய்வுப் பணிகளில் தொடர்ந்து செயற்பட்டுவருபவர். இன்றுவரை ஒரு மாக்சியவாதியாக இயங்கிவரும் இவரது இரண்டு நூல்களான மாக்சியக் கண்ணோட்டத்தில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கையின் கல்விப் பிரச்சினைகளும், தரமான கல்வியும் (2013), அரசியல் – அறிவியல் – சமூகம் (2017) ஆகியன ஏற்கெனவே வெளிவந்துள்ள நிலையில், இவர் அவ்வப்போது எழுதி பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட 22 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.