ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
116 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-99-3.
ஆபிரிக்காவில் ஆதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடும் இனங்களின் வரலாற்று ரீதியிலான தரவுகளை மையப்படுத்தி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பயாவ்ரா-எண்ணெய் வளம் மிகு தேசம், எரித்திரியா-சுதந்திரத்தின் பின்னரான சர்வாதிகார ஆட்சி, டைக்ரே-தணலாய் தகிக்கும் மண், டாவூர்-மனித குலத்திற்கு எதிரான போர், தென் சூடான்-அழிவுகளில் உதித்த ஆபிரிக்க தேசம், ருவாண்டா-திட்டமிட்ட இன வெறியாட்டம், நமீபியா-காலனியாதிக்க இனப்படுகொலை, கமரூன்-காலனிய மொழிகளால் பிளவுபட்ட மக்கள், சோமாலிலாந்து-சர்வதேச அங்கீகாரம் இல்லை, சூடான்-இராணுவ ஆட்சிக்கு அதிருப்தி, நைஜர்-ஆபிரிக்காவில் முடிவுறும் பிரான்சின் சகாப்தம், மத்திய ஆபிரிக்க குடியரசு-அமெரிக்காவின் தோல்லி, இப்ராஹிம் தரோரே-புர்கினா பாசோவின் இளம் தலைவர், லுமும்பா-ஆபிரிக்காவில் மறக்கமுடியாத பெயர், தோமஸ் சங்காரா-மக்களின் செயல்வீரர், டெஸ்மன்ட் டூட்டு-தென் ஆபிரிக்கா தந்த பேராயர் ஆகிய 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 373ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29905).