என்.சரவணன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-43-6.
டிசம்பர் 1948இல் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் சாசனத்தின் 15ஆவது பிரிவு ‘குடியுரிமை ஓர் அடிப்படை உரிமை’ எனப் பிரகடனப்படுத்தியது. அதே காலகட்டத்தில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டம் பல இலட்சம் இந்திய வம்சாவளி மக்களைக் குடியுரிமை அற்றவர்களாக்கியது. சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வமான சட்டம் குடியுரிமைச்சட்டமாகும். 1948இலிருந்து தான் தேசிய இன ஒடுக்குமுறை சட்டபூர்வமாக ஆக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒரு புறம் சுதந்திரம் கொடுக்கப்பட்ட வேளை மறுபுறம் மலையக மக்களிடம் இருந்த சுதந்திரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு நாடற்ற அனாதைகளாக ஆக்கப்பட்டார்கள். 1948இல் குடியுரிமை பறிப்பும், அதுபோல வாக்குரிமை பறிப்பும் வேகவேகமாக மேற்கொள்ளப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. அதற்கான முன் தயாரிப்புகள் என்ன, முன்கதைச் சுருக்கம் என்ன என்பதையும், நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட அந்தக் கொடூரம் நிகழ்ந்த விதத்தைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் பதிவுசெய்யும் முயற்சியே இந்நூலாகும். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 313ஆவது நூலாக வெளிவந்துள்ளது.