ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
108 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-01-0.
ஐங்கரன் விக்கினேஸ்வரா இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் நிகழ்ந்த தேசிய எழுச்சிகள் பற்றியும் அவற்றின் வீழ்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது எழுதிய 16 அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். காஷ்மீர்-யார் யாருக்குச் சொந்தம், காலிஸ்தான்-கலைந்த கனவுகளான தேசம், பால்டிஸ்தான்-இந்தியாவுடன் இணைய போராட்டம், தெலுங்கானா- பாட்டாளி மக்களின் போராட்டம், நாகலாந்து- தேசிய இன இயக்க எழுச்சி, மிசோராம்- தேசிய எழுச்சியும் வீழ்ச்சியும், மணிப்பூர்-எரிதணலாக நீறுபூத்த மண், பனூன் காஷ்மீர்- இந்துக்கள் வெளியேற்றம், ஜாலியன் வாலாபாக்- பிரிட்டிஷின் கோர முகம், பிஜீ- இந்திய மக்களுக்கு தேசிய அங்கீகாரம், நேபாளம்- மக்கள் போராட்ட பின்னடைவு, லோட்ஷாம்பா- மக்கள் மீதான இன வன்முறை, பங்களாதேஷ்- விடுதலையும் மொழிப் போரும், சக்மா இன மக்கள் நாடற்றவர்களா?, பலூசிஸ்தான்- வலுக்கும் போராட்டம், ஹஸாரா சிறுபான்மையினர் மீது தொடரும் கோரம் ஆகிய தலைப்புகளில் அவ்வப்போது எழுதப்பட்டு ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் இவை. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 384ஆவது நூலாக வெளிவந்துள்ளது.