சி.திருச்செந்தூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
vi, 94 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-22-2.
இந்நூலில் அரசியல் சமூகவியலின் தோற்றமும் முக்கியத்துவமும், தலைமைத்துவம்- அர்த்தமும் வகைகளும், அரசியலமைப்பு வரையறைகளும் விதிகளை நிர்ணயிக்கும் அம்சங்களும், இலங்கையில் சட்டவாட்சி, அரச கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் ஏற்பாட்டின் உள்ளடக்கமும் மட்டுப்பாடுகளும், இலங்கையில் அரசியல் பிரச்சினையில் மதத்தின் வகிபங்கு, இலங்கையில் அரசியல் பிரச்சினையில் மொழியின் வகிபங்கு, இந்திய வம்சாவளித் தமிழரும் பிரஜாவுரிமைப் பிரச்சினையும், யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் அரசியல் அபிவிருத்தியில் மக்கள் பங்குபற்றுதலின் போக்கு, இலங்கையின் தேசியவாத இயக்கங்கள் ஒரு நோக்கு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்து அரசியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சி.திருச்செந்தூரன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் அரசறிவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது அரசறிவியல் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் பெற்றவர். இலங்கை அரசியல், மனித உரிமைகள், முரண்பாட்டு நிலைமாற்றம், நிலைமாறுகால நீதி என்பன தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 204ஆவது நூலாக வெளிவந்துள்ளது.