ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
100 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-92-4.
இந்த நூல், அமெரிக்காவின் கொல்லைப்புறம் என்று வர்ணிக்கப்படும் தென் அமெரிக்காவில் நடைபெற்ற சாமானிய மக்களின் போராட்டங்கள் பற்றிப் பேசுகின்றது. தென் அமெரிக்க நாடுகளில் நிலவும் அரசியல் சூழலையும் மக்கள் போராட்டங்களையும் அவற்றின் பின்னணியையும் இந்நூலில் சார்ள்ஸ் ஐங்கரன் ஓரளவு அறியத்தந்துள்ளார். மப்புச்சே வன அழிப்பைத் தடுக்கும் பூர்வகுடிகள், போர்ட்டோரிக்கோ-இரண்டாந்தர பிரஜைகளாக, நிக்கரகுவா புரட்சியின் விளைவு, கொலம்பியா ஆறு தசாப்த ஆயுத மோதல், குவாத்தமாலா-இடதுசாரி பாதையில் பயணம், பிரேசில்- புதிய தலைமையும் வன்முறையும், ஆர்ஜென்டீனா குத்தாட்டம் போடும் அதிபர், கியுபா-சோவியத் ஏவுகணை நெருக்கடி, இலத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி, வெனிசுலால்-ஹியுகோ சாவெஸ் ஆளுமை, பொலிவியா சேகுவேராவின் இறுதிக் கணங்கள், ஜமேக்கா காலத்தை வென்ற பொப் மார்லி, அமெரிக்க கறுப்பின உரிமை ஆகிய தலைப்புகளில் அவ்வப்போது ஊடகங்களில் எழுதிய 13 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 363ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72278).