17218 ஏகாதிபத்தியம் சுயநிர்ணய உரிமை மக்கள் இலக்கியம்.

ந.இரவீந்திரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

80 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-80-1.

தேசியம் என்னும் புனிதக் கருத்துருவாக்கம் ஏகாதிபத்தியத்துக்கான எதிர்ப்பாக வெளிப்படும் நிலையிலாயினும் சரி, தேச எல்லைக்குள் விடுதலைத் தேசியமாக முனைப்புப் பெற்றாலும் சரி, அதனுள் ஒரு மேலாதிக்கம் உள்ளடங்கியபடியே இருக்கும் எனவும் அது ஏகாதிபத்தியச் சுயநிர்ணயமாக நிலைபெற்று தேசத்துக்கு உட்பட்ட நலன்களைப் பாதிக்கும் என்பதை இந்த நூல் பிரதான ஒரு விவாதமாக மேற்கொள்கின்றது. இந்த மேலாதிக்கத் திணையின் சுயநிர்ணயம் பற்றிய தெளிவான புரிதல் இலங்கைத் தேசத்தின் இன்றைய நிலையில் தர்க்கரீதியில் சிந்திக்கவேண்டிய விடயமாக உருப்பெற்றுள்ளது. ஏகாதிபத்தியம், சுயநிர்ணய உரிமை தொடர்பில் விவாதங்களைக் கிளர்த்தும் ஒரு நூலில் ‘மக்கள் இலக்கியம்’ பற்றிய கருத்து ஏன் அவசியம்? என்ற கேள்வி எழுவது இயல்புதான். ‘மக்கள் இலக்கியம்’ எனும் விடயம் இலங்கைத் தமிழ்ச் சூழலைப் பொறுத்தமட்டில் ஒரு பேரியக்கமாக தொழிற்பட்டது. அதற்கு ஓர் அரசியல் கருத்துநிலை இருந்தது. வ.அ.இராசரத்தினம், மஹாகவி ஆகிய இருவரும் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் அைடாளத்தை வரித்துக்கொள்ளாது இருந்தமைக்கான நியாயப்பாட்டை நூலாசிரியர் வலியுறுத்தி விரிவாகப் பேசுகின்றார். அதன் அரசியலை விளக்கியுரைக்கின்றார். (இ.இராஜேஸ்கண்ணன், அணிந்துரையில்). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 358ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல்  கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72233).

ஏனைய பதிவுகள்

10 Best Paypal Casinos

Content Sky Vegas Casino Winomania Casino Best Mobile Slots And Slot Apps For Ios Live Casino Games On Mobile Be it live chat or a