ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல்; 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
108 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-72-6.
இஸ்ரேல் தொடர்பாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய 16 அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இஸ்ரேலின் இருப்பிடச் சிக்கல்: வரலாற்றில் யூத தேசம் எங்கெல்லாம் உருவாக இருந்தன?, இஸ்ரேல் தேச உருவாக்கம்: முடிவிலா துயரின் முடிவில் உருவான தேசம், 1973 யோம் கிப்பூர் போர்: தனித்து நின்று அரபு படைகளை வென்ற போர், ‘ஒப்பரேஷன் என்டபே’ அதிரடி மீட்பு: பாலஸ்தீன போரில் பிணைக் கைதிகள் விவகாரம், காஸா போரில் இஸ்ரேல் கற்கும் பாடம்: ஈராக்-ஆப்கான் போரில் அமெரிக்க படிப்பினைகள், சுரங்க பாதையை அழிக்க நுரை குண்டுவீச்சு திட்டம்: காசாவில் ஹமாஸின் முதுகெலும்பு உடைக்கப்படுமா?, ஹமாஸ்- இஸ்ரேல் போரினால் லாபம் யாருக்கு?: ஆயுத நிறுவனங்களின் இலாபங்களுக்காக மக்கள் அழிவா?, இஸ்ரேலின் நவீன டிஜிட்டல் ஆர்மி: விலைக்கு வாங்கப்பட்ட பிரபலங்கள், கட்டார் இராஜதந்திரம் போரை நிறுத்துமா? காஸா யுத்த நிறுத்தமும் பிணைக் கைதிகள் விடுவிப்பும், இஸ்ரேல் வலதுசாரி நெதன்யாகு அரசு: ஆட்சிக் கவிழ்க்கப்படுவது சாத்தியமா?, ஈரானை போருக்கு இழுக்கும் ஷ்ரோன் தாக்குதல்: இஸ்ரேலின் வலதுசாரி நெதன்யா அரசின் திட்டம், சிறீலங்கா போரில் இஸ்ரேலின் பங்களிப்பு: ஐ.நா. சபை மூலம் விசாரிக்க வேண்டுதல், இனப் படுகொலையும் சர்வதேச சட்டங்களும்: மானுட வரலாற்றின் துயரமான அத்தியாயங்கள், அரபு-சர்வதேச அமைதிப்படை: மீண்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, எகிப்தின் போர் நிறுத்தத் திட்டம்: ஹமாஸ் மறுதலிப்பால் யாருக்கு அழிவு?, லெபனானில் திறக்கப்படும் போர்முனை? ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் ஆகிய தலைப்புகளில் அவ்வப்போது ஊடகங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பு இது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 351ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72236).