என்.சண்முகரத்தினம். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, மார்ச் 2023. (சென்னை 600 077: மணி ஆப்செட்).
220 பக்கம், விலை: ரூபா 1250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6337-01-8.
இந்நூலில் சர்வதேச அரசியல் பொருளாதாரம் தொடர்பான 10 கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1994இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையைத் தவிர மற்றவை எல்லாம் 2009-2020 காலகட்டத்தில் பிரசுரமானவை. நவதாராளவாதம், உலகமயமாக்கலின் பல்வேறு அம்சங்கள், முதலாளித்துவத்தின் எதிர்காலம், சுற்றுச் சூழல் நெருக்கடிகள் பற்றிய மார்க்சிய செல்நெறிகள், கோவிட் பெருந்தொற்றின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள், 1917 ஒக்டோபர் புரட்சி, மார்க்சியத்தின் இன்றைய பயன்பாடு ஆகியன இக்கட்டுரைத் தொகுப்பில் அலசப்படும் பிரதான விடயங்களாகும். இந்த நூலின் பல கட்டுரைகளின் பேசுபொருட்களில் நவதாராளவாதம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இந்நூலை ஒரு கட்டுரைத் தொகுப்பாகப் பார்க்குமிடத்து அதன் பேசுபொருட்கள் பெரும்பாலும் கடந்த நான்கு தசாப்தங்களின் உலக அரசியல் போக்குகள் மற்றும் விவாதங்கள் தொடர்பானவையாகக் காணலாம். எழுந்துவரும் நவலிபரலிச அலைகள்-இவை நிலைகொள்ளுமா? (1994, 2017), நவதாராள உலகமயமாக்கலும் மூலதனத்தின் தொடர்ச்சியான நெருக்கடிகளும் (2012, 2017), செல்வந்த நாடுகளின் ஏறிச்செல்லும் ஏற்றத்தாழ்வுகளும் ஜனநாயகத்தின் சிதைவும்- முதலாளித்துவம் மீட்சியின்றி சீரழிகின்றதா? (2014, 2017), மே-01 உலகத் தொழிலாளர் தினம்-சில குறிப்புகளும் சிந்தனைகளும் (2017), உள்நாட்டு யுத்தம்-சமாதானம்-உலகமயமாக்கல் (2006, 2017), கடன் ஏகாதிபத்தியம்- கடன் வங்கி ஆக்கிரமிப்பு யுத்தங்கள் புரியும் அமெரிக்க வல்லரசு (2017), மூலதனமும் இயற்கையும்- மார்க்சிய செல்நெறிகள் பற்றிச் சில குறிப்புகள் (2017), ஒக்டோபர் 1917: ஒரு மாபெரும் புரட்சியின் நினைவுகூரலும் விமர்சனமும் (2017), கார்ல் மார்க்ஸ் 200: முதலாளித்துவம் தொடரும் வரை மாக்சியத்தின் பயன்பாடும் தொடரும். (2018), கொவிட்-19 பேரிடரின்அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புகளும் பாடங்களும் (2020) ஆகிய தலைப்புக்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71429).