17223 சமுத்திரன் எழுத்துகள்-தொகுதி 03: கலை இலக்கியம் சமூகம் அரசியல் – விமர்சனப் பார்வை.

என்.சண்முகரத்தினம். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, மார்ச் 2023. (சென்னை 600 077: மணி ஆப்செட்).

182 பக்கம், விலை: இந்திய ரூபா 260., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6337-02-5.

இந்த நூல் 1976-2021 காலகட்டத்தில் எழுதப்பெற்ற 12 கட்டுரைகளை உள்ளடக்குகின்றது. நடிகர் ஒன்றியம் அளித்த வித்தியாசம் கலந்த விருந்து (1976), தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு’ நாவல் பற்றிய ஒரு விமர்சனம் (1985), துருவச் சுவடுகள்: புலம்பெயர்ந்தோர் இலக்கிய அலை (1989), ஈழத் தமிழர் போராட்டத்தில் புலம்பெயர் எழுத்தாளரின் பங்கு (1989), அகதி: ஆத்திரமும் கவித்துவமான துன்பியலும் (1991), புலம்பெயர் தமிழிலக்கியத்தின் எதிர்காலம் பற்றிச் சில கேள்விகள் (2001), இந்தியத் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் எஸ்.வி. இராஜதுரையின் இந்து-இந்தி-இந்தியா (1995), மாற்றமும் மரபு பேணலும் (2018), அழகும் அர்த்தங்களும் ததும்பிட அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும் (2018), காலத்திற்கும் புலமாற்றங்களுக்கும் ஊடாகச் சாதியம்: சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ (2019) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பன்னிரு கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71430).

ஏனைய பதிவுகள்

Beautiful Interracial Couples

Beautiful Interracial Couples There is no doubt that more people than ever before are dropping the differences and falling in love with someone who differs