ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மே 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
104 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0958-72-6.
தமது சுயநிர்ணய உரிமைக்காக, சுதந்திரத்திற்காகப் போராடும் ஐரோப்பிய இனங்களின் போராட்டங்களை உள்ளடக்கி இந்நூலை ஐங்கரன் எழுதி வழங்கியதன் மூலம் இந்தப் பூமிப்பந்தில் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் மட்டுமே சுதந்திரத்திற்காகப் போராடவில்லை என்பதையும், உலகில் மிக வளர்ச்சியடைந்து மனித உரிமைகளில் முன்னிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளிலும் தமது உரிமைக்காகப் போராடும் மக்கள் உள்ளார்கள் என்பதையும் உணரவைக்கிறார். இதில் கட்டலோனியா-கலைந்த கனவாகும் தேசம், பாஸ்க்- ஐரோப்பாவின் மூத்த குடி, அப்காசியா-நீண்ட கால அல்லலில் மக்கள், தெற்கு ஒசேத்தியா- பிராந்திய பகை சூழ்ந்த மண், நாகோர்னா காராபாக்- வரலாற்றுப் பகை, ஆர்மேனியா கொடூரமான இனப்படுகொலை, செச்சினியா நீறு பூத்த நெருப்பு, திரான்ஸ்னிஸ்ட்ரியா சிக்கித் தவிக்கும் மக்கள், கொசொவா செர்பியர் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர், சைப்ரஸ்-பிரிவினையும் சுதந்திரமும், வட அயர்லாந்து உள்நாட்டுப் போரின் முடிவு, ஸ்கொட்லாந்து தனித்துவமான தேசம், கொசொவோ ஐரோப்பாவின் புதிய தனிநாடு ஆகிய 13 கட்டுரைகளும், இரு பின்னிணைப்புகளுமாக மொத்தம் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 356ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72255).