17228 நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அளித்த சாட்சியம் (தமிழ் மொழிபெயர்ப்பு).

பொன்னுத்துரை சிவபாலன். யாழ்ப்பாணம்: பொன்னுத்துரை சிவபாலன், தலைவர், விழிப்படைந்த மக்கள் முன்னணி, அச்சுவேலி, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission, LLRC) இலங்கையின் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவால் 2010ஆம் ஆண்டில் மே மாதம் நியமிக்கபட்ட ஓர் உண்மையறியும் விசாரணை ஆணையமாகும். இது இலங்கையில் 2002 பேச்சுவார்த்தை தோல்வியில் இருந்து 2009 மே வரையான இறுதிக் கட்டப் போர் வரை நடந்த நிகழ்வுகளையும் தோல்விகளையும் முரண்பாடுகளையும் விசாரித்து, அத்தகைய தோல்விகளும் முரண்பாடுகளும் மீண்டும் இடம்பெறாதவாறு தடுக்க என பெயரளவில் அமைக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவை நம்பி அதில் சாட்சியமளித்த வைத்தியர் பொ.சிவபாலன் அவர்களின் சாட்சியத்தின் எழுத்துருவே இதுவாகும். இச்சாட்சிய எழுத்துரு, தலைவர் அவர்களே மற்றும் அங்கத்தவர்களே, யுத்த நிறுத்த ஒப்பந்தம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களும் சூழ்நிலைகளும், கற்ற பாடங்கள், எமது நாட்டின் யுத்தத்தின் காரணங்கள், பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?, சிங்கள தலைவர்களின் பங்கு, மீள் வாழ்வு, தேசிய ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஆகிய தலைப்புகளில் வழியாக சிற்றறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54667).

ஏனைய பதிவுகள்

Casino Freispiele Ohne Einzahlung

Content Freispiele Im Betway Casino – book of magic Casino What Is The Difference Between A No Deposit Bonus And A Deposit Bonus? Wie Lange