17231 முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுலை 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-95-5.

ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் தென்னாசியாவிலும் இந்தியாவிலும் அரபுலகிலும் என ஒடுக்கப்படும் பல்வேறு தேசிய இனங்கள் பற்றியும் அவற்றின் விடுதலைப் போராட்டங்கள் தொடர்பாகவும் இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கு தெளிவூட்டும் அரியதொரு பணியை அவுஸ்திரேலியாவிலிருந்து மேற்கொண்டுவரும் ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய பத்தி எழுத்துக்கள் அவ்வப்போது தமிழ் ஊடகங்களில் வெளிவந்துள்ள நிலையில் அரபுலகின் தேசிய இனங்கள் தொடர்பாக அவரது பத்தி எழுத்துக்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் யாசிடி-அழிக்கப்படும் ஆதி இனம், குர்திஸ்தான்-குமுறும் எரிமலையாக, அசேரியா- பண்டைய நாகரீகத்தின் அடையாளம், பாலஸ்தீனம்- பட்டினியை எதிர்நோக்கும் அவலம், யேமன்-தொடரும் அரபு நாடுகளின் ஆதிக்கப்போர், துனீசியா- மல்லிகைப் புரட்சியா அன்றேல் கிளர்ச்சியா?, ஈரான்- புதிய கலாச்சாரப் புரட்சி, பலூஜா- ஈராக்கில் இன்னொரு ‘மைலாய்’ படுகொலை, ஈராக்- அமெரிக்க ஆக்கிரமிப்பின் கோரம், லிபியா- ஆட்சிக் கவிழ்ப்பும் தொடரும் உள்நாட்டுப் போரும், ஹிஜாப்- பெண்உரிமையும் எதிர்ப்பு போராட்டங்களும், ஹவுதி-பிராந்திய ஆதிக்க விளைவு, சிரியா- அழிவின் அகோரத்தில் அரபு வசந்தம், சவூதி-ஈரான்: திரை மறைவுப் போர் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 371ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்