கந்தசாமி பிரதீபன். கனடா: சுதந்திர வேட்கை வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2024. (கனடா: அச்சக விபரம் தரப்படவில்லை).
xvi, 208 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-1-66641-020-4.
எமது விடுதலைப் போராட்டத்தின் தன்னுரிமை, தன்னாட்சி, தனியரசு, ஆகியவற்றை உள்ளடக்கிய கருத்தாக்கங்களின் வரலாறு, மேற்குலக நாடுகளின் பார்வை, தடைகளுக்கான காரணங்கள், பன்னாட்டு, உள்நாட்டு சட்டங்களில் இவற்றின் முக்கியத்துவம், போன்றவற்றை விரிவாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்வதானது வெளியக சுயநிர்ணயத்தின் மூலமாக, எமது அரசியல் சுதந்திரத்தை அடைந்து கொள்ளமுடியும் என்ற நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கும் என ஆசிரியர் நம்புகின்றார். இந்நூலில் இலங்கையில் தமிழன் தற்காப்புக்கு, இருப்புக்கு, நூறுவீத உத்தரவாதம் தரும் வலிமையற்றதான உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றிய புனைகோலத்தை தோலுரித்துக்காட்டி, வெளியக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. சுயநிர்ணயம் ஒரு வரலாற்றுப் பார்வை, சுயநிர்ணயமும் சிறுபான்மையினரும், சுயநிர்ணயத்தை மேற்குலக நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளும் அணுகும் முறைகள், இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோருவதற்கான வரலாற்று ரீதியான காரணங்கள், சர்வதேச உள்நாட்டுச் சட்டங்களில் சுயநிர்ணயமும் சுயநிர்ணயத்திற்கான ஏற்பளிப்பும் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.