கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பு. கொழும்பு 7: கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பு, 60/7, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
பூகோள செயல் வாரம் (23-29 ஏப்ரல் 2007), கல்வி உரிமைக்கான பரிந்துரைப்பு (27 ஏப்ரல் 2007) ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இப்பிரசுரம், கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர் உரிமையென்பது சிறுவரின் வாழ்க்கையின் நான்கு முதன்மையான அம்சங்களை உள்ளடக்குகின்றது. வாழ்வதற்கான உரிமை, வளர்வதற்கும் விருத்தியடைவதற்குமான உரிமை, பாதுகாக்கப்படுவதற்கான உரிமை, பங்குபற்றுவதற்கான உரிமை என்பனவே அவை. இச்சிறு பிரசுரம் வளர்வதற்கும் விருத்தியடைவதற்குமான உரிமை பற்றி அதிகம் பேசுகின்றது. அதில் கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சாரச் செயற்பாடுகள், சிந்தனை மற்றும் மத சுதந்திரம் என்பன அடங்குகின்றன.