சாவித்திரி W.E.குணசேகர, சந்திரா குணவர்த்தன, N.G.குலரட்ன (பதிப்பாசிரியர்கள்). நுகேகொட: இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல, 1வது பதிப்பு, 1998. (நுகேகொட: இலங்கை திறந்த பல்கலைக்கழக அச்சகம், நாவல).
x, 256 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15.5 சமீ., ISBN: 955-23-0733-3.
இந்நூலில் இலங்கையில் சிறுவர் உரிமைகள்: வரலாற்றுப் பின்னணி (ரொஹன ரத்னாயக்க), சிறுவர் உரிமைகள் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள்: ஒரு கண்ணோட்டம் (சாவித்திரி று.நு.குணசேகர), சிறுவர் உரிமைகள்: பாகுபாடு காட்டாமைக் கோட்பாடு (சாவித்திரி று.நு.குணசேகர), சிறுவர் உரிமைகள்: சிறுவரின் உயரிய நலன்கள் பற்றிய கொள்கை (சாவித்திரி று.நு. குணசேகர), சிறுவர் உரிமைகள்: உயிர்வாழும் உரிமை (சிந்தா பெரேரா), வளர்ச்சிக்கும் விருத்திக்குமான உரிமை (பிரயாஞ்சலி டீ சொய்சா, சந்திரா குணவர்த்தன), சிறுவர் உரிமைகள்: பாதுகாப்புக்கான உரிமை (டிரல் கூரே), விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும் சிறுவர் உரிமைகள் (மல்காந்தி குணவர்தன), பங்குபற்றலுக்கான உரிமை (ரொஹன ரத்னாயக்க), சிறுவர் உரிமைகளை அமுலாக்குதல் (டிரல் கூரே), சிறுவர் உரிமைகள் – விழிப்புணர்வை அதிகரித்தலும் தொடர்பாடல் நுட்பங்களும் (பத்மா எதிரிசிங்க) ஆகிய பதினொரு ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன