எஸ்.எம்.இப்றாஹிம். மருதமுனை: இப்றா, 312, ஹிஜ்ரா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (மருதமுனை: அப்னா ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 7, பிரதான வீதி).
83 பக்கம், வரைபடம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-51320-0-8.
இந்நூல் அமெரிக்க-ஈரான் அணு முறுகல் நிலையினை ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளினூடாக அணுகியுள்ளது. அமெரிக்காவின் வரலாறு, அதன் தேசிய வளர்ச்சி என்பவற்றினை தெளிவுபடுத்துவதுடன் அதன் ஆக்கிரமிப்புப் கொள்கையின் யதார்த்த நிலை குறித்தும் சில கருத்துகளை முன்வைக்கின்றது. முகவுரை, அமெரிக்க-ஈரான் அரசியல் வரலாற்றுப் பின்னணி, அமெரிக்காவின் ஆரம்பகால வரலாற்றுப் போக்கும் தற்கால உலக நாடுகள் மீதான ஆக்கிரமிப்புக் கொள்கைகளும், அமெரிக்கா-ஈரான் உரசல்: ஒரு பார்வை, அமெரிக்கா-ஈரான் உரசல் 3ஆம் உலக மகா யுத்தமாக மாறுமா?, மூன்றாம் உலக யுத்தத்தின்போது முஸ்லிம் நாடுகளின் பங்களிப்பு?, இஸ்லாமும் முஸ்லிம் நாடுகளும் கிறீஸ்தவமும் ஏனைய சமயங்களும், இஸ்ரேலும் ஈரான், சிரியாவும் (லெபனான் பலஸ்தீனும்), ஹிஸ்புள்ளாவும் ஹமாஸும், முடிவுகள், ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட நூல்கள், உலக நாடுகள் சம்பந்தமான பொதுத் தகவல்கள், பின்னிணைப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும், காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தினையும் பெற்றவர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியப் பணியாற்றியவர். கல்முனை கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். வரலாறு, புவியியல், சர்வதேச விவகாரங்கள் ஆகிய துறைகளில் ஈடுபாடுமிக்கவர்.