17242 அபிவிருத்திப் பொருளியல் (இதழ் 3): உலகமயமாதல் தொடர்பான விசேட கட்டுரைகள்.

எஸ்.சுசீகரன். யாழ்ப்பாணம்: இளம் பொருளியலாளர் மன்றம், பொருளியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறிண்டேர்ஸ்;, 424, காங்கேசன்துறை வீதி).

(34), 88 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2001/2002 கல்வியாண்டில் பயிலும் பொருளியல்துறை மாணவர்களின் இளம் பொருளியலாளர் மன்றம் வெளியிடும் ஆண்டிதழ் இது. துணை இதழாசிரியர்களாக செல்வி

P. சுகந்தி, செல்வி மு.சுகந்தா, வு.றொபின்சன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் ஆசியுரை, வாழ்த்துரைகளுடன், உலக மயமாக்கல் – செல்நெறி, உலகமயமாக்கலில் வளர்முக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், உலகமயமாக்கலும் சமமின்மைகளும், உலகமயமாக்கலும் கலாச்சார மாற்றங்களும், உலகமயமாக்கலும் வளர்முக நாடுகளில் அந்நிய நேரடி முதலீடும், உலகமயமாக்கமும் 3ம் உலக நாடுகளும், உலகமயமாக்கமும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும், உலகமயமாக்கலும் சிறிய நாடுகளும், உலகமயமாக்கல் ஓர் ஆய்வு, உலகமயமாக்கமும் அதன் பண்புகளும், உலகமயமாக்கலும் இலங்கையின், பொருளாதாரமும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை இவ்வாண்டிதழ் கொண்டுள்ளது.  (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71295).

ஏனைய பதிவுகள்