சி.அமலநாதன் (மூலம்), வே.குணரத்தினம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலாநிதி சி.அமலநாதன் மணிவிழா வெளியீட்டுக்குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).
xiii, 239 பக்கம், 12 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-624-94600-1-0.
சமூக விஞ்ஞானத்துறைப் பேராசிரியர் வே.குணரத்தினம் அவர்கள் தொகுத்திருக்கும் இந்நூல், கலாநிதி சி.அமலநாதன் அவர்களின் மணிவிழா சிறப்பு மலராக அவரது சேவைநலன் பாராட்டு நிகழ்வையொட்டி 25.04.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலின் இணைத் தொகுப்பாசிரியர்களாக பேராசிரியர்களான வே.பி.சிவநாதன், க.இராஜேந்திரம், க.சுரேஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கலாநிதி ச.அமலநாதன் அவர்களின் வாழ்வியல், கலாநிதி அமலநாதன் அவர்களின் அறிவியல் மற்றும் தொழில்சார் பின்புலம், அனர்த்த முகாமைத்துவமும் கலாநிதி அமலநாதனும், சமூக மேம்பாட்டுப் பணிகளும் கலாநிதி அமலநாதனும், இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடியும் அதன் தாக்கங்களில் இருந்து மீள்வதற்கான பரிந்துரைகளும், பிரதேச ஏற்றத்தாழ்வு மற்றும் வளர்ச்சி எண்ணக்கருக்கள், யதார்த்தம் பற்றிய ஒரு மீள்பார்வை, பிரதேச செயலகங்களுக்கான நிருவாகப் பன்முகப்படுத்தலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சவால்களும், பிரதேச அபிவிருத்தியில் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் வகிபாகம், ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தி.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்களின் வகிபங்கு, இலங்கையில் அதிகரித்துவரும் இயற்கை அனர்த்தங்களும் அனர்த்த ஆபத்து குறைப்பில் வானிலை அவதானிப்பு எதிர்வுகூறலின் முக்கியத்துவமும், இலங்கையில் பெண்தகவு அபிவிருத்திப் பின்னடைவுக்கான காரணிகளும் அதனால் அபிவிருத்தியில் எதிர்கொண்ட பின் விளைவுகளும், ஜொஹான்கோட்ஃபிரைட் ஹெர்டரின் பண்பாடு பற்றிய கருத்தாக்கம், மட்டக்களப்பு மாவட்ட உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கற்கை நெறி தொடர்பான ஒரு கண்ணோட்டம், பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும், சிறுவர் பாதுகாப்பை ஏற்படுத்துவதனூடாகவே ஆரோக்கியமான மனிதவளத்தை உருவாக்க முடியும், Health and Society, Regional Variation in Poverty Reduction in Sri Lanka, Revolutionary trends in Sri Lanka Administrative Service, Preamble for the Tax Systen – A Historical Voyage of the inland Revenue Department in Sri Lanka ஆகிய 19ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
மேலும் பார்க்க:
அபிவிருத்திக்கான இணைந்த செயற்பாடு. 17077