முப்தி யூசுப் ஹனிபா (மூலம்), அஷேய்க் இன்ஸாப் சலாஹ{தீன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: பிரிட்ஜ் பப்ளிகேஷன்ஸ், 29, பத்தியா மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).
164 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-99117-0-3.
இந்நூலில் இஸ்லாத்தில் பொருளீட்டல், இஸ்லாம் சொல்லும் சொத்துப் பிரிப்பு முறை, நாநா காணியை வைத்து விட்டு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், மரணித்தவர் உங்களுக்குத் தரவேண்டியதை மன்னித்துவிடலாம்: ஆனால் நீங்கள் அவருக்கு கொடுக்கவேண்டியது அனந்தரம், வாப்பா செய்த தவறை என்னால் தொடர முடியாது, தந்தை தரும் வரை காத்திருந்தால் எனது கதை முடிந்துவிடும், இன்னாருடைய பரம்பரையில் வந்தவன் என்பதைவிட இன்ன பரம்பரையை உருவாக்கியவன் என்பதே மேலானது, குழந்தைகளில் சிலர் பெற்றோருக்காக துஆ செய்ய இன்னும் சிலரின் பரிதாப நிலை, மாமா மகளைத் தரும்போது வீட்டையும் தருவார் என்று நினைத்துக் கொண்டவரின் கதை, சகோதரரின் மரணத்திற்குப் பிறகு சொத்துக் கேட்டவர்களின் ஏமாற்றம், வாப்பா உடைமைகளை எங்களது பெயருக்கு மாற்றிவிட்டு நீங்கள் மறுமணம் செய்துகொள்ளுங்கள், உங்கள் ஊரில் கொடுப்பார்களா?, கடந்த காலங்களில் அனாந்தரச் சொத்தில் நடந்த தவறுக்கு எப்படி பரிகாரம் தேடுவது?, இவ்வளவு நாளும் நடந்த தவறுகளுக்கு யார் பொறுப்பு?, அன்று கிடைத்திருந்தால் எனது பிள்ளைகளும் வைத்தியர்களாக ஆகியிருப்பார்கள், இரண்டாவது மனைவியின் பரிதாபம், மரணித்த மகனும் அவருடைய அனாதைக் குழந்தைகளும், வாழ்க்கையை வரலாறாக மாற்றுவோம், வித்தியாசமான தீர்ப்பு (பத்வா), வாழும்போதே பிள்ளைகளுக்கு கொடையளிப்போம், மரணப் படுக்கையில் இருந்துகொண்டு செய்யக்கூடிய தர்மங்கள், விட்டுவிட்டுப் போவது வரலாறல்ல கொடுத்துவிட்டுப் போவது தான் வரலாறு ஆகிய தலைப்புகளின் கீழ் இஸ்லாமிய சமூகத்தினரிடையே சொத்துப் பங்கீட்டு முறை பற்றிய அனுபவ உரையாடல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71438).