யாழ்ப்பாணம்: பொருளியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, சித்திரை 1998. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(5), 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
அபிவிருத்தி நிர்வாகம், திட்டமிடுதலும் அதற்கான அமைப்புகளும், அபிவிருத்திக்கான கல்விக் கொள்கை, விவசாய அபிவிருத்தி, அபிவிருத்திக்கான பொது உற்பத்தி நிறுவனங்கள், அபிவிருத்தியில் அதிகாரப் பகிர்வு, அபிவிருத்திக்கான முகாமைத்துவம், இந்த நூலின் பின்னணி ஆகிய அத்தியாயத் தலைப்புகளின் கீழ் அபிவிருத்தி நிர்வாகம் பற்றி இந்நூல் பேசுகின்றது. அபிவிருத்தி நிர்வாகம் தொடர்பாக இரு அணுகுமுறைகளை இந்நூல்; முன்வைத்திருக்கிறது. ஒன்று ‘நிர்வாக அமைப்பு அணுகுமுறை”. இது அபிவிருத்தியில் பொது நிர்வாக கட்டமைப்பிற்கு அதி உயர்ந்த பங்கிளை வழங்குகின்றது. அது சிக்கனத்தையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் வற்புறுத்துகின்றது. இரண்டாவது, ‘சமூக அமைப்பு கோட்பாடு’ ஆகும். இதில் சமுதாய பின்னணிகளான நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒருமித்த வளர்ச்சியை வற்புறுத்துகிறது. அதாவது, அபிவிருத்தி நிர்வாகம் சமூகத்தோடு இணைந்ததாக இருக்கவேண்டும். ஆகவே இந்த அணுகுமுறையில் பல சமூகப் பொருளாதார சீர்திருத்தங்களை நிர்வாகம் வேண்டிநிற்கின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 112310).