தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xv, 412 பக்கம், விலை: ரூபா 2950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-51-5.
சிவில் சேவை தொடர்பான பொதுவான அறிமுகத்துடன் பிரித்தானியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் சிவில் சேவைக் கட்டமைப்புகளை முன்னிலைப்படுத்தி ஒப்பியல் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சிவில் சேவை- ஓர் அறிமுகம், பிரித்தானியாவில் சிவில் சேவை, பிரான்சில் சிவில் சேவை, ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை, இந்திய சிவில் சேவை, இலங்கை நிர்வாக சேவை, புதிய பொது முகாமைத்துவம்: இலத்திரனியல் ஆளுகை, ஒம்புட்ஸ்மன்-குறைகேள் அதிகாரி, நிர்வாகச் சட்டமும் நியாய சபைகளும் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகள், கலைச்சொற்கள், உசாத்துணைகள், சுட்டிகள் என நூலின் இறுதிப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானங்கள் துறையில் அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் கலாநிதி கிருஷ்ணமோகன், யாழ்.பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71483).