17249 சிதறிய துளிகளை ஒன்றாக்கி.

SEDOT அமைப்ப. ஐக்கிய இராச்சியம்;: தமிழர் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம், 1வது பதிப்பு, 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(28), 66 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

இலங்கையின் வடகிழக்கில் ஸ்ரீலங்காவின் வான்படைகளால் நடாத்தப்பட்ட வான்தாக்குதல்கள் தொடர்பானதொரு கண்ணோட்டம் இது. ‘வான் தாக்குதல்கள்’ (சம்பவம், அவர்களின் சிந்தனையிலிருந்து: மேகலா, மதியரசி, நிதர்சினி, நிசாந்தினி, ரூபவதனி), ‘உடல் ரீதியான தாக்கங்கள்’ (உடற் பாதிப்பு, என்றுமே பழைய மாதிரி இல்லை, மருத்துவச் சேவை: ஒரு பார்வை), ‘உளவியல் தாக்கங்கள்’ (பின்னணி, அனுபவம், பின்னதிர்வு, முடிவுரை, அருட்தந்தை றெஜினால்ட்), ‘சூழலில் ஏற்படும் தாக்கங்கள்’ (இயற்கையின் வீழ்ச்சி), ‘கல்வியில் ஏற்படும் தாக்கங்கள்’ (கேள்விக்குறியான எதிர்காலம், கிபீர் வரும்போது, அதிபரின் பார்வை), ‘பொருளாதாரத்தில் தாக்கம்’ (பொருளாதாரத் தாக்கம், கிழக்கில் என்ன நடக்கின்றது, மகேஸ்வரி கந்தையா, பயத்தில் வாழ்தல்), ‘முடிவுரை’, ‘வருமுன் காப்பதே மேலானது’ ஆகிய ஆறு பிரிவுகளில் இக்கண்ணோட்டம் ஒளிப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பின் இணைப்புக்கள் (வான் தாக்குதல் அட்டவணை, சத்திர சிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை-வான் தாக்குதல் தொடர்பான அறிக்கை, செஞ்சோலை குண்டு வெடிப்புச் சம்பவம், துன்பியல் நிகழ்வுகளின் பின்னரான மன அழுத்த நோயைத் தீர்மானித்தல்) ஆகியவை இவ்வாவணத்தின் இறுதியில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86036).

ஏனைய பதிவுகள்

Book Of Ra 2022

Content Vegas paradise casino review: Avis Sur Les Symboles De Book Of Ra De Conclusie Over Book Of Ra The Book of Ra Deluxe edition