கலாநிதி ஜீவகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
128 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-84-0.
நமது குழந்தைகள் எங்களுடைய உடமைகள் என்ற மரபு வழியிலிருந்து சற்றே விலகி, அவை நமது சொத்துக்கள் அல்ல சமூகத்தின் சொத்துக்கள்-சமூகத்தின் குழந்தைகள் என்ற தான் புலம்பெயர்ந்து வாழும் சூழலில் நின்று மேலைத்தேய கருத்தியலை தமிழ்ச் சூழலில் பொருத்திப் பார்க்கும் இந்நூல் பத்து அத்தியாயங்களை கொண்டது. உங்களுடைய குழந்தைகள் உங்களுடைய குழந்தைகள் அல்ல, நாமும் நம் செல்வங்களும், அகப்பைக் காம்பு, பிரம்பு தொலைந்தது எங்கே?, அட வீட்டுக்கு வீடு வாசல்படி வேண்டும், சொன்னது நான் தானா?, உறங்கியபடியே உலாவுகின்ற பெற்றோர், நான் யார் என்று புரிகின்றதா?, வயித்தில் நெருப்பைத் தினம்; கட்டியபடி ஏன் இந்த வெளிநாட்டுச் சீவியம்?, இவர்கள் பிள்ளைபிடிகாரர்களா இல்லை ஆபத்பாந்தவர்களா? ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 262ஆவது நூலாக வெளிவந்துள்ளது.