கணபதி மகேசன். யாழ்ப்பாணம்: க.மகேசன், 6, இராணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் ஓப்செட் பிரின்டிங், நல்லூர்).
10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
நுண்ணறிவு, தாய்-சேய் (கெற்பகால காரணிகள்/ பிரசவகால காரணிகள்), தவறான குழந்தை வளர்ப்பு (பிறந்தபின் வரும் காரணிகள்), என மூன்று பிரிவுகளாக வகுத்து குறைபாட்டுக் குறந்தைகள் பற்றிய விளக்கத்தினை ஆசிரியர் சுருக்கமாக வழங்கியிருக்கிறார். பிறந்தபின் வரும் காரணிகளாக அறிமுகம், குழந்தை மையக் குடும்பம், தாய் வயிற்றில், நீராட்டுதல், உணவு-சுத்தம்-சுகாதாரம், சில ஒழுங்கீனம், குழந்தையின் பிடிவாதமும் அழுகையும், குழந்தைக்கு எரிச்சல் உண்டாக்கும் செயல்கள், பயங்கர செயற்பாடுகள் சில, ஒலி-ஒளி தாக்கம், ஆடை அணிகள், கல்வியில் தேவையற்ற தலையீடு, மக்கட்பேறு-திருக்குறள், தவறான குழந்தை வளர்ப்பால் உண்டாகும் பின்விளைவுகள் சில ஆகிய 14 தலைப்புகளில் விளக்கமளித்திருக்கிறார். இந்நூலாசிரியர் இலங்கை கல்விச் சேவையில் தரம்-2 கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27656).