எல்சி கொத்தலாவல, இந்திராணி தலகல, நீல் தலகல. கொழும்பு: சிறுவர் செயலக அலுவலகம், சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
228 பக்கம், விளக்கப்படம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1214-33-3.
இரு பகுதிகளாகத் தயாரிக்கப்பட்ட இவ்வழிகாட்டி கைநூல், பெற்றோர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்துவோருக்கு தேவையான அறிவினையும் தேர்ச்சிகளையும் வழங்குகின்றது. இக்கைநூலின் முதலாம் பகுதி பெற்றோர் கல்வி வளவாளர்கள், பெற்றோருக்கான செயலமர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பதற்கான வழிகாட்டியைக் கொண்டுள்ளது. பகுதி இரண்டு, சிறந்த பெற்றோராகுவது தொடர்பான செயலமர்வுகளுக்குப் பயன்படுத்தத் தேவையான தகவல்களைத் தருகின்றது. இளஞ் சிறார்களை விளங்கிக்கொள்ளுதல், உற்பத்தி தன்மைவாய்ந்த பெற்றோராயிருத்தல், இளஞ்சிறாருக்கு ஆதரவான சூழலை வழங்குதல், இளஞ்சிறார்களை பாதுகாத்தல், சமநிலையான ஆளுமையை விருத்தியாக்கல், சிறாரை பாடசாலைக் கல்விக்காகத் தயார்செய்தல், இளஞ்சிறாரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெற்றோரின் வகிபாகம், ஆகிய ஏழு கருப்பொருள்களை முன்வைத்து இவ்வழிகாட்டிப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 88016).