கே.எஸ்.ரகுநாதன். யாழ்ப்பாணம்: துளிர்கள்-உள சமூக மேம்பாட்டு நிறுவனம், இல. 47, மாட்டின் வீதி, 1வது பதிப்பு, ஆண்டுவிபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: கலைமகள் கொம்பியூட்டர் பிரின்ட்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக, திருநெல்வேலி).
26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
சிறுவர் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் காரணிகள், சிறுவர் விருத்தியில் தாக்கம் செலுத்தும் காரணிகள் (உயிரியல் காரணிகள், உளவியல் காரணிகள், சூழல் காரணிகள்), தனிநபர் விருத்திப் பருவங்கள் (முன்-பிரசவப் பருவம் -கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை, சிசுப் பருவம் – 0-01 வரை, நடக்க கற்றுக்கொள்ளும் பருவம் – 01-03 வரை, முன்பள்ளிப் பருவம் – 03-06 வரை, பாடசாலைப் பருவம் – 06-12 வரை, முன் கட்டிளமைப் பருவம் – 12-18 வரை, கட்டிளமைப் பருவம் – 18-25 வரை, முன் முதிர்ப் பருவம் – 25-35 வரை, முதிர்ப் பருவம் – 35-55 வரை, வயோதிபப் பருவம் – 55இன் பின்), பிள்ளைப் பருவ விருத்திக் கோளாறுகள், பிள்ளைப்பருவப் பயம், நடத்தைக் கோளாறு, கழித்தல் கோளாறு, குற்றம் புரிகின்ற நடத்தை, மந்த உளவிருத்தி, கட்டிளமைப் பருவம்/காளைப் பருவம், ஆளுமை விருத்தி ஆகிய தலைப்புகளின் கீழ் இந்நூலில் சிறுவர்களின் வாழ்க்கை விருத்திப் படிகள் பற்றி விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60880).